'ஒரே மலேசியா'
ஐக்கியம் என்பது வெறுத்தக்க வார்த்தையல்ல. பல் இன மக்கள் வாழும் நாடுகளில் இன ஐக்கியம் என்பது மிக வலுவான மந்திர வார்த்தை. ஆனால் அந்த மக்களிடையே பரஸ்பர மரியாதை செலுத்தும் மான்பு இருக்கும் வரையில் மட்டுமே, ஐக்கியம் என்பதும் அழகாகவிருக்கும், அது இல்லாத இடங்களிலெல்லாம், அது வெறும் வார்த்தை அலங்காரம் மட்டுமே.
பல்லின மக்கள் சேர்ந்து வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இருந்து 'ஒரே மலேசியா' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் இந்த வீடியோப் பாடல், இசையிலும், அமைப்பிலும் ஐக்கியத்தைப் போலவே அழகாயிருக்கிறது. ஏ.ஆர். ரகுமானின் 'வந்தே மாதரம்' அல்பத்தின் சாயல் தெரிகிறது. ஆனாலும் தனித்துவம் காட்டுகிறது. மலேசிய இசைக்கலைஞர்களின் அருமையான இம்முயற்சிக்கு எமது வாழ்த்துக்கள்!அன்மையில் வெளிவந்திருக்கும் இப்பாடலை, You Tube Corner ல் உங்களுக்காகத் தொகுத்திருக்கிறோம்.
இவ் இசைப்பாடலுக்கான
• இயக்கம், படத்தொகுப்பு - சசிதரன் ராஜா (Sasitharan Raja)
• வரைகலை (Graphics Designed) - ராஷைடி மொஹ்மட் (Razaidi Mohamad)
• விஷுவல் கிரபிக்ஸ் (Visual Graphics) - ஷாஹ்ருல் அஸ்லான் ஷஹ்புதின் (Shahrul Azlan Shahbudin)
• புகைப்படங்கள் (Still Photography) - நித்தியானந்தன் (Nethianathan)
No comments:
Post a Comment