Friday, August 10, 2012

200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றார் உசைன் போல்ட்



லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட்  மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

ஏற்கனவே 100 மீற்றரிலும் அவர் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் உசைன் போல்ட் எதிர்பார்த்தது போன்றே வெற்றிபெற்றார்.

இதில் முதலிடத்தை உசைன் போல்ட் வென்றதோடு, 2ஆம், 3ஆம் இடங்களையும் உசைன் போல்ட்டின் சக நாட்டவர்களே வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

200 மீற்றர் தூரத்தை உசைன் போல்ட் 19.32 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொள்ள,உசைன் போல்டிற்கு சவாலாக மாறிக் கொண்டிருப்பவராகக் கருதப்படும் யோஹன் பிளேக் 19.44 செக்கன்களில் 200 மீற்றர் தூரத்தை ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்காவின் மற்றொரு வீரரான வரன் வெய்ர் குறித்த தூரத்தை 19.84 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் முதலிடத்தைப் பெற, யோஹன் பிளேக் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஒலிம்பிக்கில் 100 மீற்றரில் புதிய சாதனையுடன் தங்கம் வென்ற உசேன் போல்ட்டின் ஓட்டம் (காணொளி)


லண்டனில் இடம்பெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய ‌போட்டியில் ஜமேக்க வீரர் உசேன்போல்ட் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

அவர் ஆண்களுக்கான 100 மீ.ஓட்டப்பந்தயப் போட்டியில் ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.63 வினாடிகளில் கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார்.

இவருக்கு பின்னர் ஜமைக்காவின் யோஹான் பிளேக் 9.75 வினாடிகளில் இரண்டாம் இடமும், அமெரிக்காவின் ஜஸ்டின் 9.79 வினாடிகள் வந்து மூன்றாம் இடமும் பெற்றனர்.


  

Friday, May 11, 2012

பிபிசியில் வானிலை அறிவிப்புகள் வாசித்தார் இளவரசர் சார்ல்ஸ்


பிரித்தானியாவின் இளவரசர் சார்லஸ் அந்நாட்டின் ஊடக நிறுவனமான பிபிசியில் வானிலை அறிவிப்புகளுக்கான செய்தி வாசித்தார்.

Sunday, May 6, 2012

நாடெங்கும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் வெசாக் வாரம்


நாடெங்கும் வெசாக் வாரம் மிகச்; சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் வெசாக் பந்தல்கள் (தோரணங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.அத்துடன் பல்வேறு அமைப்புக்களினாலும் பிரதேச மக்களினாலும் தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Thursday, April 19, 2012

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?



 கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது மிக நீண்ட காலமாகவே கேள்விக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது.

இப்போது அந்தகேள்விக்கு விடை கிடைக்கும் சம்பவம் ஒன்று இலங்கையின் வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ

Saturday, March 31, 2012

சீனாவில் சக்கை போடு போடுகிறது சிறுவர்களின் சிறுநீரில் வேக வைக்கும் முட்டை!

 தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கெட்களுடன் அலைகின்றனர். எல்லாம். சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான்.
அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில்

Tuesday, March 6, 2012

உசேன் போல்டைத் தோற்கடித்தார் இளவரசர் ஹரி!

ஜமைக்கா நாட்டுக்கு விஜயம் (6-3-2012) செய்த பிரித்தானிய இளவரசரான ஹரி, உலகின் வேகமான மனிதன் என்ற பெருமையைப் பெற்ற ஜமைக்கா ஓட்ட வீரரான உசேன் போல்ட்டை தோற்கடித்துள்ளார்.

Monday, January 30, 2012

 குத்துச்சண்டை வீரர் ஹொலிபீல்டின் கதை பிடித்தார் ஜனாதிபதி!

 உலக குத்துச்சண்டை சாம்பியன் ஹெவன்டர் ஹொலிபீல்ட் இன்று (30) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அலரி மாளிகையில் சந்தித்தார்.
இதன் போது ஜனாதிபதி ஹொலிபீல்டின் காதை பிடித்துப் பார்த்தார்.

Friday, January 20, 2012

மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால்.............. ! (வீடியோ இணைப்பு)


தலைப்பு கொஞ்சம் சூடா இருந்தாலும் இந்த செய்தியும் அப்படித்தான் .மேசையில் பெண்ணை அமரவைத்து அப்படியே தனது வாயினால் தூக்கி சாதனை படைத்திருக்கிறார் இந்த நபர்.

 எத்தனையோ விதமான பலசாலி மனிதர்களை நாம் பார்த்திருப்போம். பளு தூக்குவோர், மல்யுத்தம் புரிவோர் என பல விடயங்களில் உள்ளடங்குவர்
இலங்கையில் கிறிக்கெற் விளையாடும் நாய் 


(வீடியோ இணைப்பு)


இலங்கையில் சிங்களக் குடும்பம் ஒன்றின் வளர்ப்புப் பிராணியான நாய் ஒன்று மிகவும் சிறப்பாக கிறிக்கெற் விளையாடுகின்றது.

குறிப்பாக விக்கெற் காப்பாளர் பணியை செவ்வனே செய்கின்றது.

Thursday, January 19, 2012

தனது உடலின் பின்புறத்தில் விளம்பரத்தை பச்சைகுத்துவதற்கு ஏலம் நடத்தும் யுவதி

நியூஸிலாந்து யுவதியொருவர் தனது உடலின் பின்புறத்தை (பிருஷ்டம்) விளம்பர பலகையாக பயன்படுத்த அனுமதியளிக்க முன்வந்துள்ளார். இதற்கான ட்ரேட் மி எனும் இணையத்தளத்தில் ஏலமொன்றையும் அவர் நடத்துகிறார்.

23 வயதான டினா பேஸ்னெக் எனும் பெண்ணே இவ்வாறு தனத பிருஸ்டத்தில் விளம்பரத்தை பச்சை

Sunday, January 15, 2012

நீர்கொழும்பு கடற்கரை பூங்காவில் நடைபெற்ற தேசிய மட்ட நீச்சல் போட்டி

தேசிய மட்ட கடல் நீச்சல் போட்டிகள் இன்று முற்பகல் 8..30 மணி முதல் நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரை பூங்காவில் நடைபெற்றன.

கடல் நீர் நீச்சல் போட்டிகளுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமையை மேம்படுத்துதல் மற்றும் உற்சாகப்படுத்தல் ஆகிய குறிக்கோளின் அடிப்படையில் மேல்மாகாண வீதி அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் நிர்மாணம் , மீன்பிடி மற்றும் சுகாதார துறை அமைச்சர் நிமல்லான்சாவின் கருத்திட்டத்தின் கீழ் இந்த கடல் நீர் நீச்சல் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன.