Wednesday, December 7, 2011

உலகின் நீளமான கேக் சீனா சாதனை

 ஆயிரத்து 68 மீற்றர் நீளமான கேக்கை தயாரித்ததன் மூலம் உலக நாடுகளில் இதுவரை இருந்த நீளமான கேக்கிற்கான சாதனையை சீனா முறியடித்துள்ளது.

ஷங்காயில் ஷங்கிரிலா ஹொட்டல் மேசைகளில் இந்த ஆயிரத்து 68 மீற்றர் நீளமான கேக் வைக்கப்பட்டிருந்தது.  சமையல் கலை நிபுணர்களும்

Sunday, July 10, 2011

முத்தையா முரளிதரனின் பந்து வீச்சு வித்தை

இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் இங்கிலாந்து  சுழல்பந்து வீச்சாளர் கிரகெம் பீட்டர் சுவனுக்கும்  இடையிலான சுவாரசியமான போட்டி ஒன்று அண்மையில் நடந்தது.
இது ஒரு வித்தியாசமான போட்டியாகும். விக்கற் தடிகளின் மேல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கிளாஸின் விளிம்பில் வைக்கப்பட்டுள்ள நாணயத்தை கண்ணாடி கிளாஸ் கீழே விழாமல் வீழ்த்த வேண்டும்.
இந்த போட்டியில் வெற்றி பெறப் போவது யார்?  காணொளியில் பாருங்கள்

Tuesday, June 28, 2011


இறப்பர் தோல் மனிதன்


நீங்கள் இறப்பர் தோல் மனிதனை பாரத்திருக்கிறீர்களா? இந்த நபரை பாருங்கள் தனது தோலை இழுத்து தனது முகத்தையே மூடுகிறார்.இப்படியும் மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள்.


Saturday, June 18, 2011

முதலையின் வாயிலில் மனித தலை


அமெரிக்காவின் புளோரடா மாநிலத்தில் சாகச கலைஞர் ஒருவர் முதலையின் வாயிலில் தனது தலையையிட்டு சாகசம் நிகழ்த்தினார்.அதன் போது முதலையின் வாயிலில் அவரது தலை சிக்கிக் கொண்டது.பின்னர் அவர் காப்பாற்றப்பட்டார்.


Friday, June 17, 2011



ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ராமோனா என்பவர் வளர்த்துவரும் நாய் ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள நோயென் என்ற பகுதியில் வசித்து வரும் ராமோனா வேக்மன் என்பவர் ஆப்ரிக்க நாட்டின் வேட்டை நாய் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நாய் அண்மையில், ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றது. இதனால் அதன் உரிமையாளரான வேக்மன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அனைத்து நாய் குட்டிகளுக்கும் ஆங்கில "பி' எழுத்தில் தொடங்கும் ஆப்ரிக்க பெயர்களை சூட்டியுள்ளார். எனினும், தனது வளர்ப்பு பிராணி ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றது தொடர்பான மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காரணம்,வேக்மனுக்கு அந்த நாய்குட்டிகளையும் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த 17 குட்டிகளுக்கும் தேவையான பால், தாய் நாயிடம் இல்லை. தாயிடம் பால் குடிப்பதில் குட்டிகளும் பலத்த போட்டிபோட்டு சண்டையிட்டுக் கொள்ளும். இதனால் வேக்மன் குட்டிகளுக்கு புட்டிப்பால் கொடுத்தார். அதிலும் சிக்கல் எழுந்தது. புட்டி பாலை ஒவ்வொரு குட்டியாக புகட்டிவிட்டு,கடைசி குட்டிக்கு வரும் போது முதல் குட்டிக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும். திரும்பவும் முதல் குட்டியிலிருந்து பால் புகட்ட வேண்டும்.அனைத்து நாய் குட்டிகளையும் பராமரிப்பதில் பெரும் சிக்கல் எழுந்ததால், வேக்மன் பெரும்பாலான குட்டிகளை விற்பனை செய்து விட முடிவு செய்துள்ளார். ஒரு நாய்க்குட்டியின் விலை 60 ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளார்.

உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காய்



அமெரிக்காவின் நியூ ரிச்மன்ட் மாகாணத்தைச் சேர்ந்த கிரிஸ் ஸ்டீவன்ஸ் பயிரிட்ட பூசணிக்காய் உலகில் அதிக எடை கூடியபூசணிக்காயாக கின்னஸ் சாதனை படைத்துள்ளத

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் 821 கிலோ (1810 பவுண்) நிறையாகும். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு உலகின் அதிக எடை கூடிய பூசணிக்காயின் நிறை ஆயிரத்து 725 பவுண்களாகும்.

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காயின் சுற்றளவு 4.74 மீற்றர்களாகும்.
2009 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்த பூசணி. இது ஆயிரத்து 725 பவுண் நிறையாகும். ஒஹியோவைச் சேர்ந்த கிரிஸ்டி என்பவரது தோட்டத்தில் விளைந்ததே இப்பூசணிக்காய்.

Sunday, May 22, 2011

உங்களுக்காக பிரபல உர்து பாடல் (நஸம்) ஒன்று

Tuesday, May 17, 2011

ஒரே பார்வையில் பல சாதனைகள்
பலவிதமான சாதனைகளை பார்த்திருப்பீர்கள்.

இந்த வீடியோவில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட சாகசங்கள் இருக்கின்றன.பார்த்து ரசியுங்கள்