Wednesday, December 7, 2011

உலகின் நீளமான கேக் சீனா சாதனை

 ஆயிரத்து 68 மீற்றர் நீளமான கேக்கை தயாரித்ததன் மூலம் உலக நாடுகளில் இதுவரை இருந்த நீளமான கேக்கிற்கான சாதனையை சீனா முறியடித்துள்ளது.

ஷங்காயில் ஷங்கிரிலா ஹொட்டல் மேசைகளில் இந்த ஆயிரத்து 68 மீற்றர் நீளமான கேக் வைக்கப்பட்டிருந்தது.  சமையல் கலை நிபுணர்களும்
அருகில் நின்றனர்.

உலசாதனைகள் பதிவேடான கின்னஸ் பதிவேட்டு அதிகாரிகளும் கேக்கின் அளவை எடுத்ததோடு சாதனை பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டதும் சான்றிதழை வழங்கினார்கள்.

இந்தக் கேக் 80 சமையல் கலை நிபுணர்களினால் 24 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்டதாகும். ஆயிரத்து 45 கிலோ கோதுமை மா, 600 கிலோ கிறீம், 400 கிலோ சொக்கிளேட், 200 கிலோ சீனி என்பன இதன் தயாரிப்பில் உபயோகிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment