தனது உடலின் பின்புறத்தில் விளம்பரத்தை பச்சைகுத்துவதற்கு ஏலம் நடத்தும் யுவதி
நியூஸிலாந்து யுவதியொருவர் தனது உடலின் பின்புறத்தை (பிருஷ்டம்) விளம்பர பலகையாக பயன்படுத்த அனுமதியளிக்க முன்வந்துள்ளார். இதற்கான ட்ரேட் மி எனும் இணையத்தளத்தில் ஏலமொன்றையும் அவர் நடத்துகிறார்.
23 வயதான டினா பேஸ்னெக் எனும் பெண்ணே இவ்வாறு தனத பிருஸ்டத்தில் விளம்பரத்தை பச்சை
குத்திக்கொள்வதற்காகஇ அதை ஏலத்தில் விட்டுள்ளார்.
குத்திக்கொள்வதற்காகஇ அதை ஏலத்தில் விட்டுள்ளார்.
தனது பிருஸ்டத்தின் ஒரு பகுதியில் 9X9 சென்ரிமீற்றர் அளவில் விளம்பரத்தை பச்சை குத்துவதற்கு இந்த ஏலத்தில் வெற்றி பெறுபவர் அனுமதிக்கப்படுவார் என டினா பேஸ்னெக் கூறியுள்ளார்.
'ஏலத்தில் வெற்றி பெறுபவர் மிக முட்டாள்தனமாக எதையும்செய்ய மாட்டார் என நம்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கெனவே தனது உடலில் 5 பச்சைகளை குத்திக்கொண்டுள்ளார்.
பொருளாதார கஷ்டங்கள் காரணமாகவே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர்கூறுகிறார். எனினும் டினாவுக்கு கருணை மனசு. இதன்மூலம் கிடைக்கும் பணத்தின் 20 சதவீதத்தை நலநிதியமொன்றுக்கு அன்பளிப்பு செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
17-1-2012 செவ்வாய்க்கிழமை வரை அதிகபட்சமாக 12இ500 நியூஸிலாந்து டொலர் (சுமார் 11 லட்சத்து 35 ஆயிரம் இலங்கை ரூபா) வழங்க ஒருவர் முன்வந்துள்ளார்.
ஜனவரி 20 ஆம் திகதி இந்த ஏலம் முடிவடையவுள்ளது. 21 ஆம் திகதி வெற்றிபெறுபவரின் விளம்பரம் பச்சை குத்தப்படும். அதை வெற்றியாளர் நேரடியாக பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் இப்போது உலகெங்கும் பேசப்படுகிறது. பல நாடுகளிலிருந்து என்னுடன் பலர் தொடர்புகொண்டுள்ளனர்.
இதுவரை தொடர்புகொண்டர்களில் பலர் விளம்பர நிறுவனங்களைச் சேர்ந்தவர்களாகத் தென்படுகின்றனர்' என்கிறார் டினா பேஸ்னெக்.
No comments:
Post a Comment